சுடச்சுட

  

  இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளன செயல் வீரர்கள் கூட்டம்

  By பண்ருட்டி  |   Published on : 06th December 2014 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனத்தின் கடலூர் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் பண்ருட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பச்சையப்பன் தலைமை வகித்தார். பண்ருட்டி நகரச் செயலர் நாகராஜ், மாவட்டச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, ஐஎன்டியூசி முன்னாள் பொதுச் செயலர் ராமசாமி, ஐஎன்ஆர்எல்எப் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் ராமச்சந்திரன், ராஜாராமன், முன்னாள் மாவட்டச் செயலர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்டச் செயலர் தங்க.தனசேகரன் வரவேற்றார்.

  இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலர் வாழப்பாடி இராம.சுகந்தன் சிறப்புரையாற்றினார். முன்னாள் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.பி.கலியபெருமாள், பண்ருட்டி நகர காங்கிரஸ் தலைவர் ஏ.கே.மணி, விருத்தாசலம் நகரத் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ஆர்.தனசேகரன், வழக்குரைஞர்கள் குமரன், ஆனந்தசெல்வன், ராஜேந்திரன், ராமசாமி, அரசன், பார்த்தசாரதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

  கூட்டத்தில், டிசம்பர் 16ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்கும் கடலூர் மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் திரளாக பங்கேற்பது. நெல்லிக்குப்பம், பெண்ணாடம் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவாஹர்லால் நேருவின் 125-வது பிறந்தநாள் விழா, வாழப்பாடி ராமமூர்த்தியின் 75ஆம் ஆண்டு பவள விழாவை சிறப்பாக நடத்துவது, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை ரத்து செய்ய முயற்சிக்கும் மத்திய அரசை கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai