சுடச்சுட

  

  உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கடலூர் மத்திய சிறையில் சிறைவாசிகள் எய்ட்ஸ் தின உறுதிமொழி எடுத்தனர்.

  இதற்கான நிகழ்ச்சி கடலூர் மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிறை கண்காணிப்பாளர் ஆ.முருகேசன் தலைமையில் அனைத்து சிறைவாசிகள் மற்றும் காவலர்கள் எய்ட்ஸýக்கு எதிரான உறுதிமொழி எடுத்தனர்.

  அப்போது, சிறை கண்காணிப்பாளர் ஆ.முருகேசன் பேசுகையில், எச்ஐவி தொற்றுள்ளோரை புறக்கணிக்காமல் அவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். அவர்களுக்கும் சம உரிமை அளிக்க வேண்டும். எச்ஐவி தொற்றில்லாத தமிழகம், புறக்கணித்தல் இல்லாத தமிழகம், எய்ட்ஸ் தொடர்பான இறப்புகள் இல்லாத தமிழகம் உருவாக்கப்பட வேண்டும் என்பது இந்த ஆண்டின் எய்ட்ஸ் தின மையக்கருத்தாகும். இதனை உருவாக்க அனைவரும் உறுதியெடுக்க வேண்டும் என்றார்.

  நிகழ்ச்சியில் சிறை கூடுதல் கண்காணிப்பாளர் ம.ஆண்டாள், சிறை மருத்துவர் டி.கேசவன், அலுவலக பணியாளர்கள், சிறை மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai