சுடச்சுட

    

    கடலூர் மத்திய சிறையில், கைதியிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    கடலூர் கேப்பர்மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரம் பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ளவர்களிடம் செல்போன் புழக்கம் உள்ளதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், வியாழக்கிழமை சிறைச்சாலை கூடுதல் கண்காணிப்பாளர் ம.ஆண்டாள் தலைமையில் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    இதில், மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆயுள் தண்டனைக் கைதி சா.லெனின் என்ற முருகேசனின் அறையிலிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், பேட்டரி, சிம்கார்டு கிடைக்கவில்லையாம்.

    இதுகுறித்து கூடுதல் கண்காணிப்பாளர் ம.ஆண்டாள் அளித்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai