Enable Javscript for better performance
கழிவுநீர் ஊற்ற இடம் ஒதுக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கழிவுநீரை ஊற்றுவதற்கு உரிய இடத்தை ஒதுக்கித் தர வேண்டும் என அம்பேத்கர் வாகன கழிவுநீர் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து சங்கத்தின் கெளரவத் தலைவர் தா.ஸ்ரீதர் தலைமையில் கடலூர் நகராட்சி ஆணையரை சந்தித்து வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்: கடலூர் நகராட்சிப் பகுதியில் வீடுகள், அலுவலகங்களில் சேரும் கழிவுநீரை வாகனங்கள் மூலமாக எடுத்து அப்புறப்படுத்தும் தொழிலில் சுமார் 20 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சுகாதாரம் கெடாத வகையில் கழிவுநீரை ஊற்றி வருகிறோம். ஆனாலும், சில சமயங்களில் இதில் பிரச்னை ஏற்படுவதால், அதற்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்து தருமாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai