சுடச்சுட

  

  திட்டக்குடி தேர்முட்டி ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டன.

  திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோயில் குடமுழுக்கு ஜனவரி மாதம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு விநாயகர், அம்மன், வைத்தியநாத சுவாமிக்கு ரூ.70 லட்சம் மதிப்பில் அரசு மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் மூன்று புதிய தேர்கள் செய்யப்பட்டன. இந்த தேர்களை நிறுத்துவதற்கு கோயிலுக்கு சொந்தமான தேர்முட்டி பெரியார் வீதியில் உள்ளது. இந்த இடம் ஆக்கிரமிப்பில் சிக்கி இருந்தது.

  தற்போது புதிய தேர்கள் நிறுத்த இடம் தேவைப்படுவதால் கோயில் நிர்வாகம், குடமுழுக்கு விழா கமிட்டியினர், கோயில் சிவனடியார்கள் ஆக்கிரமிப்புதாரர்களை ஆக்கிரமிப்பை அகற்றி தேர்கள் நிறுத்த உதவ கேட்டுக்கொண்டனர்.

  இதில் ஒரு சிலர் மட்டும் தாமாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். மேலும் பலர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இதனையடுத்து கோயில் குடமுழுக்கு கமிட்டியினர், அறநிலையத் துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகளை வெள்ளிக்கிழமை அகற்றினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai