சுடச்சுட

    

    தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி: வட்டம், நகரத்தில் நிரந்தர இடம் அமைப்பு

    By கடலூர்,  |   Published on : 06th December 2014 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்காக வட்டம், நகரத்தில் நிரந்தர இடம் அமைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    கடலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணி அனைத்து வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதற்காக மேற்படி அலுவலகங்களில் பொதுமக்கள் வசதிக்காக நிரந்தர இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வெளியூர் சென்றவர்கள் மற்றும் இதர காரணங்களுக்காக பதிவுசெய்யாமல் விடுபட்டவர்களுக்கு மேற்படி அலுவலகங்களில் புதிய விண்ணங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து மேற்படி அலுவலகங்களில் நியமிக்கப்பட்டுள்ள திட்ட அதிகாரிகளிடம் உரிய ஆவணங்களுடன் அளிக்கலாம்.

    இதனை சரிபார்த்து தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களில் மேற்படி அலுவலர் கையொப்பம் செய்த பின்னர் பயோ மெட்ரிக் முறையில் உடனே பதிவு செய்துகொள்ளப்படும். இதற்காக ஒவ்வொரு வட்டத்திலும் துணை வட்டாட்சியர் அளவில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதன்படி பண்ருட்டி வட்டத்தில் சிவகாமிசுந்தரியை 94432 06768 என்ற எண்ணிலும், கடலூர் ஆறுமுகம் 94871 38746, குறிஞ்சிப்பாடி பூபாலசந்திரன் 88831 55565, சிதம்பரம் ஜெயக்குமார் 90959 63241, காட்டுமன்னார்கோவில் அந்தோணிராஜ் 74020 01001, விருத்தாசலம் ரவிச்சந்திரன் 93600 21593, திட்டக்குடி செந்தில்குமார் 97518 74544, வேப்பூர் உலகாளநந்தன் 94426 57184 ஆகியோரை தொடர்புகொள்ளலாம்.

    நகராட்சிகள் அளவில் நெல்லிக்குப்பம் வருவாய் ஆய்வாளர் என்.ஹரிகுமார் 94428 67127, பண்ருட்டி ஏ.சேகர் 93814 43679, கடலூர் எஸ்.முரளி 99944 96477, சிதம்பரம் அருள்செல்வன் 99655 57883, விருத்தாசலம் ஏ.நாராயணசாமி 94439 20437 ஆகிய எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

    பொதுமக்களின் வசதிக்காக அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் அலுவலகத்தில் இப்பணி நடைபெறும். செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாகும்.

    எனவே, பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தேசிய மக்கள் தொகை பதிவுக்கான பதிவை செய்துகொள்ள வேண்டும்.

    இப்பதிவை 2015ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் முடித்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai