சுடச்சுட

    

    பேருந்து சக்கரத்தில் சிக்கி பொறியியல் மாணவர் சாவு

    By பண்ருட்டி,  |   Published on : 06th December 2014 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண்ருட்டி பேருந்து நிலையத்தில், பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்த பொறியியல் மாணவர் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள திருவாமூரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன்கள் சஞ்சய் (21), வெங்கடகிருஷ்ணன் (19). இருவரும் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தனர்.

    கல்லூரி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த இவர்கள், வியாழக்கிழமை மாலை விழுப்புரம் செல்ல பண்ருட்டி பேருந்து நிலையம் வந்தனர். விழுப்புரம் செல்லும் பேருந்து வந்தவுடன் வெங்கடகிருஷ்ணன் ஓடிச் சென்று ஏறிய போது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.

    இதுகுறித்து பண்ருட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai