சுடச்சுட

  

  கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச கூலியாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும், அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு தேசிய சமூக பாதுகாப்பு நிதியம் உருவாக்க வேண்டும், பொதுத் துறை நிறுவன பங்கு விற்பனையை கைவிட வேண்டும், பாதுகாப்புத் துறை மற்றும் காப்பீட்டுத் துறையில் அந்நிய மூலதனத்தை அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் நாடு தழுவிய பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

  அதன்படி, கடலூர் உழவர் சந்தையிலிருந்து வெள்ளிக்கிழமை பேரணி புறப்பட்டது. பாரதியார் சாலை வழியாகச் சென்ற பேரணி தலைமை தபால் நிலையத்தில் நிறைவு பெற்றது.

  அதனைத் தொடர்ந்து தொமுச மாநில துணைத் தலைவர் ராசவன்னியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை

  பெற்றது.

  ஏஐடியுசி அகில இந்திய துணைத்தலைவர் வகிதாநிஜாம், மாவட்டச் செயலர் எம்.சேகர், சிஐடியு மாநிலச் செயலர் பி.கருப்பையன், மாவட்டத் தலைவர் ஜி.பாஸ்கரன், தொமுச மாவட்டச் செயலர் சுகுமார், மண்டலத் தலைவர் பி.பழனிவேல், பிஎம்எஸ் மாவட்டப் பொதுச்செயலர் வி.முருகன், ஐஎன்டியுசி நிர்வாகிகள் கொளஞ்சி, பலராமன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai