சுடச்சுட

    

    விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

    விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பல்வேறு குறைபாடுகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ச்சியான புகார் மனுக்கள் சென்றதைத் தொடர்ந்து கடந்த மாதம் 24ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். 25ஆம் தேதி மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் வித்யாசங்கர் ஆய்வு நடத்தினார். இதனைத்தொடர்ந்து, கடந்த சில நாள்களுக்கு முன் செவிலியர்கள் 5 பேர் பணியிட மாற்றமும், 3 ஊழியர்கள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் மீண்டும் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, உள்நோயாளிகள், புறநோயாளிகள் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து, நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

    மேலும், விருத்தாசலம் செராமிக் பகுதிகள், அரசு அச்சகம் உள்ளிட்டவற்றிலும் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது, கோட்டாட்சியர் ப.மு.செந்தில்குமார், வட்டாட்சியர் சு.சீனிவாசன். அரசு மருத்துவர் குலோத்துங்கச்சோழன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai