Enable Javscript for better performance
மாணவர் விடுதிக்குள் புகுந்த மயில்- Dinamani

சுடச்சுட

    

    மாணவர் விடுதிக்குள் புகுந்த மயில்

    By சிதம்பரம்  |   Published on : 06th December 2014 04:00 AM  |   அ+அ அ-   |    |  

     வழி தவறி சிதம்பரம் அண்ணாமலை நகரில் மாணவர் விடுதிக்குள் புகுந்த மயிலை வனத் துறையினர் மீட்டு காப்புக்காட்டில் விட்டனர்.

    சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதிக்குள் காக்கைகள் துரத்தியதால் ஆண் மயில் ஒன்று புகுந்தது. இதுகுறித்து மாணவர்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து, வனவர் பி.சோமசுந்தரம், வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் ஆகியோர் சென்று விடுதிக்குள் புகுந்த மயிலை மீட்டு காப்புக்காட்டில் கொண்டு விட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai