சுடச்சுட

  

  சிதம்பரம் அருகே புவனகிரி ஸ்ரீராகவேந்திரா மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா நடைபெற்றது.

  புவனகிரி அரிமா சங்கத்துடன் இணைந்து நடத்திய விழாவுக்கு ஏ.சி.பி.ரத்தினசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட அரிமா சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 30 மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளுக்கு பதக்கங்கள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

  பின்னர் மாற்றுத் திறனாளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவர் ரமேஷ், செயலாளர் உதயசூரியன், பொருளாளர் ராம்கிஷோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீராகவேந்திரா சுவாமிகள் சேவா டிரஸ்ட் அறங்காவலர் கே.கதிர்வேலு, ரகு ஆச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai