Enable Javscript for better performance
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்:இந்து முன்னணியினர் 25 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்:இந்து முன்னணியினர் 25 பேர் கைது

    By கடலூர்,  |   Published on : 07th December 2014 03:46 AM  |   அ+அ அ-   |    |  

    கடலூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் 25 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    கடலூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி கடலூர் அம்பேத்கர் சிலை அருகே அமைப்பினர் சனிக்கிழமை திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலச் செயலர் அ.வா.சனீல்குமார் தலைமை வகித்தார். நகரச் செயலர்கள் தெ.அய்யம்பெருமாள், கே.வெங்கடேசன் நிர்வாகிகள் மகராஜன், நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்ற

    னர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அப்போது, இந்து முன்னணியினருக்கும் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்திருந்த தலித் அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

    பின்னர், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 25 பேரை போலீஸார் கைது செய்தனர். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai