சுடச்சுட

    

    கடலூரில் அம்பேத்கர் நினைவு தினம் பல்வேறு அமைப்புகள் சார்பில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

    அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக சார்பில் மாநில மாணவரணி செயலர் இள.புகழேந்தி தலைமையில் கட்சியினர் கடலூர் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், நகரச் செயலர் ராஜா, கவுன்சிலர் நடராஜன், வாஞ்சிநாதன், தொமுச நிர்வாகி பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் ஒன்றியம், நகர சார்பில் கடலூர் பெரியார் சிலையிலிருந்து நகரச் செயலர் பொ.பாவாணன் தலைமையில் பேரணி நடைபெற்றது. பின்னர், அம்பேத்கர் சிலைக்கு மாவட்டச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில், மாவட்ட துணைச் செயலர்கள் ப.குணத்தொகையன், த.ஸ்ரீதர், மாநில நிர்வாகிகள் ச.திருமார்பன், ஆதித்தகரிகாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்டச் செயலர் சா.வெற்றிசெல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணைச் செயலர் க.சுதாகர், பொருளாளர் எம்.ராஜா, ஒன்றிய செயலர்கள் கமல், டி.குமார், பாலு, எஸ்.சக்திவேல், செய்தி தொடர்பாளர் எஸ்.அன்பரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பாஜக எஸ்.சி., எஸ்.டி. அணி சார்பில் மாநிலச் செயலர் இரா.குணா தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், ஒன்றியத் தலைவர் வே.ச.ராஜா, ஒன்றிய பொதுச் செயலர் செ.மணிமாறன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.வெங்கடேசன், நிர்வாகிகள் ஞானம், முரளி, ராஜேஷ், ஜான்பாட்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில இளைஞரணி செயலர் ஆர்.சுரேஷ் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். இதில், மாநிலச் செயலர் காமராஜ், நெல்லிக்குப்பம் நகரத் தலைவர் விஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கடலூர் பார் அசோஷியேசனில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வழக்குரைஞர் இல.திருமேனி தலைமை வகித்து அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், வழக்குரைஞர்கள் சிவராஜி, தமிழரசன், சிவக்குமார், பூபாலன், புருஷோத்தமன், அறவாழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    சிதம்பரம்

    கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாவட்டச் செயலர் வ.க.செல்லப்பன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் குறிஞ்சிவளவன், பேட்டை ரத்தினவேல், பெரு.திருவரசு, பால.அறவாழி, கரிகாலன், வீரஜெகன், கமல்ராஜ், பொறியாளர் சிவக்குமார், இன்பவளவன், ராஜாராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் நகரத் தலைவர் ஆர்.திருமாறன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நடனம் பிள்ளை, மாவட்டப் பொருளாளர் வே.ராஜரத்தினம், மாவட்ட வர்த்தக அணி பொதுச் செயலர் கே.ஜெயக்குமார், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் வேலுபிள்ளை, குமராட்சி ஒன்றியச் செயலர் சி.பழனிராஜா, நிர்வாகிகள் கே.நடராஜன், பாலரவி, சின்னிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சி சார்பில் எஸ்.ஆபீத்உசேன் தலைமையில், மூப்பனார் பேரவைத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன், பொதுச் செயலர் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்ட மூப்பனார் பேரவைத் தலைவர் எஸ்.கே.வைத்தி, கே.ரஜினிகாந்த் கே.நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

    அண்ணாமலைநகர் திருவேட்குளத்தில் உள்ள சிலைக்கு கடலூர் தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில் மாவட்டச் செயலர் சபா.சசிக்குமார் மாலை அணிவித்தார். நகரச் செயலர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் ஆர்.பாலு, சிதம்பரம் நகரச் செயலர் சி.க.விஜயகுமார், மாவட்ட மாணவரணி செயலர் சபரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புவனகிரி ஒன்றியச் செயலர் ஆர்.பானுசந்தர், நகர பொருளாளர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கடலூர் மாவட்ட லோக் ஜனசக்தி கட்சி சார்பில் அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாநிலச் செயலர் ஆர்.பன்னீர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    பண்ருட்டி

    பண்ருட்டியில் கடலூர் (வடக்கு) மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் இளஞ்செழியன், ஐஎன்டியுசி தலைவர் சுகுமார்,பொருளாளர் ரவிக்குமார், சேவாதளம் பாலாஜி, ராஜன் உள்ளிட்டோர் நெய்வேலி புதுக்குப்பத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு எஸ்.துரைராஜ் தலைமையில், பண்ருட்டி நகரச் செயலர் உத்திராபதி, நகர குழு தினேஷ், சங்கர், நடராஜன் உள்ளிட்டோர் பண்ருட்டி சென்னை சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அண்ணாகிராமம் ஒன்றிய அமைப்பாளர் இரா.தமிழருவி தலைமையில், முகாம் செயலர் துரை விஜய், மாவட்ட துணை அமைப்பாளர்கள் தெ.விஜயன், அ.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்டச் செயலர் டி.கிருஷ்ணன் தலைமையில், ஒன்றியச் செயலர் ஜே.சிவக்குமார், வழக்குரைஞர் குமரேசன், பெரியார் மாணவர் நற்பணி இயக்கம் சார்பில் குமார் தலைமையில், சிவராமன், சரத்பாபு உள்ளிட்டோர் தனித்தனியாக அண்ணாகிராமத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    விருத்தாசலம்

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், ஜாதி, மத எதிர்ப்புப் பேரணி விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி, பாலக்கரை, திலீபன் சதுக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலை வரை நடைபெற்றது. பேரணி முடிவில், மாவட்டப் பொருளாளர் அய்யாயிரம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில கருத்தியல் பரப்பு துணைச் செயலர் திருமாறன், நகர அமைப்பாளர் மருதய்யன், மாவட்ட துணைச் செயலர் குரு, நிர்வாகிகள் சுப்புஜோதி, அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திமுக சார்பில், பாலக்கரை திலீபன் சதுக்கத்தில் உள்ள சிலைக்கு, நாடாளுமன்ற, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கணேசன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. தலைமைக் கழகப் பேச்சாளர் சிவக்கொழுந்து, நகர அவைத் தலைவர் பாலகிருஷ்ணன், நகர துணைச் செயலர்கள் ராமு, சந்தானலட்சுமி, நகர இளைஞரணி அமைப்பாளர் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் அருள்செல்வன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், மாவட்ட பொதுச் செயலர் சுபாஷ்சந்திரபோஸ், தொகுதி இளைஞரணித் தலைவர் அன்னபிரகாஷ், தொகுதி பொதுச் செயலர் தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்திய குடியரசுக் கட்சியின் மாவட்டத் தலைவர் கதிர்வேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநில இளைஞரணி செயலர் மங்காப்பிள்ளை, மாவட்ட செயலர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai