சுடச்சுட

  

  திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடியில் பொது சுகாதாரத் துறை மூலம் சனிக்கிழமை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

  முகாமிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் குணசீலன் தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழித்தேவன் முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

  கடலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ஜவகர்லால் மருத்துவத்துறையின் பணிகள் குறித்து பேசினார்.

  முகாமில் பொது சிகிச்சை, மார்பகப் புற்று நோய், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் கர்ப்பப்பையில் உள்ள கட்டிகளை அகற்ற அறுவை சிகிச்சை ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.

  இதில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.

  முகாமில், வட்டாரத் தலைமை மருத்துவர் மகேஸ்வரி, ஒன்றியக் குழு தலைவர் கந்தசாமி, துணைத் தலைவர் அன்னகிளிகுணசேகரன், பேரூராட்சி மன்றத் தலைவர் நீதிமன்னன், மாவட்ட கவுன்சிலர்கள் எழிலரசன், தென்னரசு, ஒன்றியக் கவுன்சிலர் அருள், ஊராட்சி துணைத் தலைவர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai