சுடச்சுட

  

  கடலூரை அடுத்த சேடப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை இரவு உரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் மருந்து நெடியால் மூச்சுத் திணறி தொழிலாளி உயிரிழந்தார்.

  கடலூரை அடுத்த சேடப்பாளையத்தில் வெங்கடேசன் என்பவர் உரக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கடையிலிருந்த உரப் பொருள்கள் எரிந்ததில், வேதியியல் பொருள்கள் கருகி ஒருவித துர்நாற்றம் வீசியுள்ளது.

  இதனால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 50 பேருக்கு கண் எரிச்சல் மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உரக்கடைக்கு அருகில் வசித்து வந்த சரவணன் (52) என்ற தொழிலாளி உரத்தின் நெடி தாங்காமல் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

  தகவலறிந்த கடலூர் தீயணைப்புத் துறை வீரர்கள் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர்.

  இருப்பினும் உரம் எரிந்ததால் கார நெடி அப்பகுதியில் வீசியுள்ளது. இதனால் பலருக்கு கண் எரிச்சல், வாந்தி மயக்கம் தொடர்ந்துள்ளது. சுகாதாரத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறையினர் சேடப்பாளையத்தில் முகாமிட்டு சனிக்கிழமை சிகிச்சை அளித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai