சுடச்சுட

  

  கருப்புச் சட்டை அணிந்து தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்

  By சிதம்பரம்  |   Published on : 07th December 2014 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, சிதம்பரம் காந்தி சிலை அருகே சனிக்கிழமை கடலூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்க ழகத்தினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் எம்.முகமது அய்யூப் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் எம்.முகமது இக்பால் வரவேற்றார். மாவட்டச் செயலர்கள் எஸ்.எம்.ஜே.முகமது அஸ்லம், வி.எம்.ஆஷிக்நூர், ஆர்.சவுகத் அலிகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனித நேய மக்கள் கட்சியின் மாணவர் இந்தியா மாநிலச் செயலர் புதுமடம் அனீஸ் பேசினார். திராவிடர் கழக தலைமைக் கழகப் பேச்சாளர் யாழ்.திலீபன், உலமாக்கள் அணி செயலர் எம்.ஒய்.முகமது அன்சாரி, வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் ஆர்.முகமது ஜியாவுதீன், தமுமுக மாவட்ட துணைத் தலைவர் எம்.அப்துல்பாசித் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகரத் தலைவர் கே.ஜமால்ஹூசைன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai