சுடச்சுட

    

    திட்டக்குடி கோயில் குள ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு: அறநிலையத்துறை அதிரடி

    By கடலூர்  |   Published on : 07th December 2014 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து அறநிலையத் துறை ஆணையர் சனிக்கிழமை உத்தரவிட்டார்.

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருள்மிகு அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோயில் குடமுழுக்கு ஜனவரி 2-6ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, கோயில் சேவா சங்க நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை பங்களிப்புடன் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கோயில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இப் பணிகளை கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழித்தேவன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தனபால் ஆகியோர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர். அப்போது, கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள கொடி மரம், கட்டுமானப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து கோயில் திருக்குளத்தை பார்வையிட்ட ஆணையர், ஒரு வாரத்துக்குள் குளத்தின் பழைய வரைபடத்தின் படி ஆக்கிரமிப்புக்களை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க அறநிலையத் துறையினருக்கு உத்தரவிட்டார். மேலும் பணிகளின் தரத்தை ஆய்வு செய்து திட்டமிட்டபடி குடமுழுக்கு நடத்தப்படும் எனக் கூறினார்.

    ஆய்வின் போது கடலூர் உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் முருகன், ஒன்றியத் தலைவர்கள் மங்களூர் கந்தசாமி, நல்லூர் ராஜலட்சுமிராஜேந்திரன், பேரூராட்சி மன்றத் தலைவர் நீதிமன்னன், மாவட்ட கவுன்சிலர் எழிலரசன் உள்பட பலர் உடனிருந்தனர். முன்னதாக ஆணையரிடம் தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றியச் செயலர் ரெங்கசுரேந்தர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செய்தி தொடர்பாளர் ராஜஅலெக்ஸ்சாண்டர் ஆகியோர் திருக்குள ஆக்கிரமிப்பு குறித்து மனு அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai