சுடச்சுட

    

    விருத்தாசலத்தை அடுத்த நல்லூர் கிராமத்தில் ஊராட்சி சார்பில், பெரியார் சமத்துவப் பூங்கா திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    நல்லூர் அம்பேத்கர் நகர் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அம்பேத்கர் இளைஞர் மன்றம் சார்பில், பெரியார் சமத்துவப் பூங்கா திறப்பு விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர் சரவணன் பூங்காவை திறந்து வைத்து, மரக் கன்றுகளை நட்டார். ஊராட்சித் தலைவர் சிவகுமார் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் வருவாய் ஆய்வாளர் கார்த்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் ரவிகுமார், ராஜூ, முத்துக்கருப்பன், குமரேசன், துரைசாமி, பரமசிவம், மணிகண்டன், முருகேசன், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai