சுடச்சுட

    

    பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் வைத்திருந்த ரூ.1.50 லட்சத்தை திருடிச் சென்றவர்களை பண்ருட்டி போலீஸார் தேடி வருகின்றனர்.

    பண்ருட்டி வட்டம், நடுமேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராசு (47). முந்திரி வியாபாரம் செய்து வருகிறார். தேவராசும், அவரது மகனும் பண்ருட்டியில் உள்ள ஒரு வங்கியில் வெள்ளிக்கிழமை பணம் எடுத்ததாகவும், மற்றொரு வங்கியில் மகனுக்கு கல்விக் கட்டணம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் மீதம் இருந்த ரூ.1.50 லட்சத்தை பைக் பெட்டியில் வைத்தனராம்.

    பின்னர் வட்டாட்சியர் அலுவலக வாகன நிறுத்தும் இடத்தில் பைக்கை நிறுத்திவிட்டு அலுவலகத்துக்குச் சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்த போது பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1.50 லட்சம் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் துளசிதாஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai