Enable Javscript for better performance
பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

    By கடலூர்,  |   Published on : 07th December 2014 03:43 AM  |   அ+அ அ-   |    |  

    அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் அனுகிரஹா அறக்கட்டளை சார்பில் வெள்ளிக்கிழமை பாராட்டப் பெற்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களை அனுக்கிரஹா அறக்கட்டளை சார்பில் கெளரவிக்கும் நிகழ்ச்சி கடலூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இவ்விழாவில் அறக்கட்டளை நிறுவனர் கே.ஐ.மணிரத்னம் 95 மாணவ, மாணவியருக்கு தலா ரூ.2,000 ஊக்கத் தொகை வழங்கினார்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் பின்தங்கிய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் விநா-விடை புத்தக கையேட்டையும் வழங்கினார்.

    இவ்விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ர.பாலமுரளி, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்க முன்னாள் தலைவர் கோ.சூரியமூர்த்தி, புனிதவளனார் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பீட்டர் ராஜேந்திரன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் எம்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai