சுடச்சுட

  

  மக்கள் நீதிமன்றம்: 33 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்வு

  By கடலூர்  |   Published on : 07th December 2014 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான சொத்துப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டது.

  கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம்,பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 8 நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டன.

  கடலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற நீதிமன்றத்தை மாவட்ட நீதிபதி எஸ்.குமரகுரு தொடங்கி வைத்து பேசுகையில், மக்களுக்கு நீதி உரிய நேரத்தில் சென்றடைய வேண்டும். நாடு முழுவதும் சுமார் 3 கோடிக்கும் அதிகமான வழக்குகள் தேங்கியுள்ளன. எனவே, இதுபோன்ற சிறப்பு முகாம்கள் நடத்தி வழக்குகள் விரைந்து தீர்வு காணப்படுகிறது என்றார்.

  தொடர்ந்து நடைபெற்ற முகாமில் மாவட்டம் முழுவதும் 33,860 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு ரூ.47.24 கோடி இழப்பீட்டுத் தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டது. இதில், வாகன விபத்து வழக்குகள் 1,374, சொத்துப் பிரச்னை தொடர்பாக 129, குடும்ப நலம் தொடர்பாக 9, நில ஆர்ஜிதம் தொடர்பாக 84, கடன் தொகை வசூலித்தல் 1,759, குற்றவியல் வழக்குகள் 30,305 ஆகும்.

  இதில், நல்லாத்துரைச் சேர்ந்த வை.சீனுவாசன் என்பவர் சொத்தில் பங்கு கேட்டு தனது குடும்பத்தாரை எதிர்த்து வழக்குத் தொடுத்திருந்தார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் சனிக்கிழமை தீர்வு காணப்பட்டது. இதன் மூலமாக சீனுவாசனுக்கு ரூ.1.09 கோடி சொத்து கிடைக்க ஏற்பாடானது. அதேபோன்று விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்த 2 ஜோடிகள் சேர்த்து வைக்கப்பட்டனர்.

  நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி சுபாதேவி, தலைமை குற்றவியல் நடுவர் ஜெயராஜ், பயிற்சி நீதிபதி கிறிஸ்டோபர், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் செல்வமுத்துக்குமாரி, மோட்டார் வாகன விபத்து சிறப்பு நீதிபதி தாண்டவன், கூடுதல் சார்பு நீதிபதி-2 குணசேகரன், நில ஆர்ஜித பிரிவு நீதிபதி காந்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.1 ராபர்ட்கென்னடி, நடுவர் எண்.2 பிரபாவதி, நடுவர் எண்.3 புகழேந்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா, சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் ஒய்.மரியலூயிஸ் மற்றும் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai