Enable Javscript for better performance
மாணவனுக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    மாணவனுக்குப் பாராட்டு

    By விருத்தாசலம்,  |   Published on : 07th December 2014 03:41 AM  |   அ+அ அ-   |    |  

    அச்சகத் துறை ஊழியர்கள் குடும்பங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

    சென்னை, மதுரை, சேலம், சேலம், புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாசலம் உள்ளிட்ட ஊர்களில் அரசு அச்சகம் செயல்பட்டு வருகிறது. இந்த அச்சகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பிள்ளைகள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதன்படி, இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற விழாவில், விருத்தாசலம் அச்சகத்தில் பைண்டிங் பிரிவில் பணிபுரியும் குமார் மகன் ராஜேஷ்குமார் 2ஆம் பரிசு பெற்றார். இவருக்கு, இயக்குநர் ஜெயகாந்த் பரிசு வழங்கிப் பாராட்டினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai