சுடச்சுட

  

  கடலூர் மண்டல அளவிலான தடகளப் போட்டி கடலூரில் அண்மையில் நடைபெற்றது.

  இதில், கடலூர் துறைமுகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவி வி.வான்மதி ஈட்டி எறிதல் போட்டியில் வெற்றி பெற்றார்.

  இதனைத் தொடர்ந்து மதுரையில் டிசம்பர் 3-ம் தேதி முதல் நடைபெற்று வரும் பாரதியார் தின குடியரசு தின மாநில தடகளப் போட்டியில் பங்கேற்றார்.

  மண்டல போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் பி.தேன்மொழி, உடற்கல்வி இயக்குநர் பி.முருகேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் கே.வசந்தி, என்.சித்ரா, கே.புஷ்பநாதன் ஆகியோர் பாராட்டினர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai