சுடச்சுட

  

  நெய்வேலி பவர் சிட்டி அரிமா சங்கம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா அண்மையில் நடைபெற்றது.

  நெய்வேலி அருகே ஏ.குறவன்குப்பத்தில் உள்ள டிரைவர் கிராஸ் மிஷன் மன வளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் நடைபெற்ற இவ் விழாவை அரிமா சங்க மாவட்ட 2-ம் துணை நிலை ஆளுநர் ஜி.எம்.மாதவராஜ் தொடங்கி வைத்தார்.

  அரிமா சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஏ.பி சிவராஜ், தலைமை பவர் சிட்டி அரிமா சங்கத் தலைவர் ஜி.எஸ்.தண்டபாணி, மாவட்டத் தலைவர் பி.என்.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  அரிமா சங்க மாவட்ட அவைச் செயலர் ஆர்.செல்வக்குமார் பங்கேற்று வாழ்த்திப் பேசினார்.

  விழாவில் பவர் சிட்டி சங்கப் பொருளர் எஸ்.கே.ரமேஷ்பாபு, உறுப்பினர்கள் சி.லெட்சுமி நாராயணன், ஆர்.துரைராஜ், வி.ராமதாஸ், ஒய்.எஸ்.அருளப்பன், ஏ.ராஜசேகர், டி.கருணாநிதி, ஆர்.அன்வர்தீன், கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  பவர்சிட்டி அரிமா சங்கச் செயலர் எஸ்.சுந்தரராஜன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai