Enable Javscript for better performance
மின் சிக்கனம்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு- Dinamani

சுடச்சுட

    

    மின் சிக்கனம்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு

    By கடலூர்,  |   Published on : 07th December 2014 03:45 AM  |   அ+அ அ-   |    |  

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக நெல்லிக்குப்பம் கோட்டம் சார்பில் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    நெல்லிக்குப்பத்தை அடுத்த மேல்பட்டாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்துக்கு தலைமையாசிரியை எஸ்.ஆஷாகிறிஸ்டிஎமரால்டு தலைமை வகித்தார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக நெல்லிக்குப்பம் கோட்டம் செயற் பொறியாளர் சி.பழனிராஜூ, உதவி செயற் பொறியாளர் கே.சரவணதுரைமோகன் உள்ளிட்டோர் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்து காணொளி காட்சி மூலம் விளக்கினர். மேலும் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில், உதவி மின் பொறியாளர்கள் ஜெ.ஷெர்லி, எஸ்.ராஜசேகர், கே.ராஜாராமன், எம்.தென்னரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai