சுடச்சுட

  

  பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, கடலூரில் இசுலாமிய அமைப்புகள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு தினத்தை முன்னிட்டும், இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மசூதி கட்ட வலியுறுத்தியும், இடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கக் கோரியும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் உழவர் சந்தை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எஸ்.அப்துல்லா தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.அபுபக்கர்சித்திக், தி.க. மாநில பொதுச் செயலர் துரை.சந்திரசேகரன், ஜாதிய ஒழிப்பு விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் பா.கருணாநிதி, என்டபிள்யுஎப் மாநிலத் தலைவர் ஏ.ரஜியாபானு, எஸ்டிபிஐ கட்சி மாவட்டத் தலைவர் எச்.நஸ்ருதீன் ஆகியோர் பேசினர்.

  ஆர்ப்பாட்டத்தில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்து,முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களின் சின்னங்கள் அணிந்தவர்கள் கைகோர்த்து நின்றனர்.

  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் உழவர் சந்தையில் மாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கடலூர் வடக்கு மாவட்டச் செயலர் வி.எம்.ஷேக்தாவூத் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் இஸ்மாயில், துணை செயலர்கள் ஷாஜகான், மன்சூர்,காசிம், பொருளாளர் ஜாகீர்உசேன், வர்த்தகர் அணிச் செயலர் கேப்டன் ஹைதர்அலி, இளைஞரணி செயலர் இப்ராஹிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் கருப்புச்சட்டை அணிந்திருந்தனர்.

  தமுமுக மாவட்டத் தலைவர் அபுபக்கர் சித்திக், மமக மாவட்ட செயலர் மதார்ஷா, மாநில நிர்வாகி கோவை சுல்தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் எம்.சேகர் ஆகியோர் பேசினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai