சுடச்சுட

  

  வட்டாட்சியர் பேச்சுவார்த்தை:போராட்டம் ஒத்தி வைப்பு

  By விருத்தாசலம்,  |   Published on : 07th December 2014 03:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

  இக் கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை முதல் காட்டுமன்னார்கோவில் வரை புதிய வழித் தடத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும். மங்கலம்பேட்டை, புல்லூர் சாலையை புதிய சாலை அமைக்க வேண்டும். உளுந்தூர்பேட்டை முதல் விருத்தாசலம் வரை செல்லும் அனைத்து நகரப் பேருந்துகளையும் ரயில் நிலையம் வரை சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, டிசம்பர் 10ஆம் தேதி மங்கலம்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெறுவதாக இருந்தது.

  இந்நிலையில், இது குறித்து விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சு.சீனிவாசன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

  இக் கூட்டத்தில், கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

  இக் கூட்டத்தில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் இணைப் பொதுச் செயலர் மெகராஜ்தீன், இந்தியக் குடியரசுக் கட்சி மாநில இளைஞரணி செயலர் மங்காப்பிள்ளை, சி.பி.எம் அம்பேத் மற்றும் காவல்துறையினர், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai