சுடச்சுட

  

  அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியர் வீடு மீது தாக்குதல்

  By சிதம்பரம்  |   Published on : 08th December 2014 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இடம் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்னையால் சிதம்பரத்தில் சனிக்கிழமை இரவு அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் வீடு, கார் மற்றும் பொருள்கள் சேதப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக, அதிமுக நகரச் செயலாளர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழங்குப் பதிவு செய்துள்ளனர்.

  சிதம்பரம் கனகசபை நகர் 2-வது பிரதான சாலையில் வசிப்பவர் பூ.ராஜமன்னன் (52). இவர், அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல இயற்பியல் பிரிவு பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

  இந்நிலையில், பூ.ராஜமன்னன் வீட்டுக்கு சனிக்கிழமை இரவு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 10-க்கும் மேற்பட்டோர், வீட்டு வாயிலில் இருந்த நாற்காலி, பூந்தொட்டிகளை உடைத்தும், உருட்டுக்கட்டையால் ஜன்னல் கதவுகள் மற்றும் பொருள்களை அடித்து சேதப்படுத்தினர்.

  பின்னர், வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான காரை கல்லை தூக்கிப் போட்டும், உருட்டைக் கட்டையால் தாக்கியும் சேதப்படுத்திவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.

  தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

  விசாரணையில் பேராசிரியர் பூ.ராஜமன்னனுக்கும், அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தருக்கும் இடையே இடம் வாங்குவது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

  இதில் ஆத்திரமடைந்த தோப்பு சுந்தர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சனிக்கிழமை இரவு பேராசிரியர் வீட்டுக்கு வந்து தாக்குதல் நடத்திவிட்டு, ஜன்னல் வழியாக மண்ணெண்ணெயை ஊற்றி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தலைமறைவானது தெரியவந்துள்ளது.

  இதுகுறித்த புகாரின் பேரில், நகர போலீஸார் அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், கணேசன், சந்திரமோகன், ராஜா, பஞ்சர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai