சுடச்சுட

  

  ஆதிதிராவிட பழங்குடியின முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கக் கூட்டம்

  By சிதம்பரம்,  |   Published on : 08th December 2014 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத் துறை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நலச் சங்கம் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  மாநிலத் தலைவர் கே.மனோகர் தலைமை வகித்தார். பொருளாளர் பி.ராஜசேகரன் வரவேற்றார். மாநில மகளிரணித் தலைவர் டி.வத்சலா, தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் பி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  சிதம்பரம் தொகுதி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். பொதுச் செயலாளர் எம்.சுப்பிரமணியன், அமைப்புச் செயலாளர் டி.இந்துநேசன், மாநில தலைமை நிலையச் செயலாளர் என்.நல்லபெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.சிவராஜ் நன்றி கூறினார்.

  கல்வித் துறையை போல, ஆதிதிராவிட நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை, அவர்களிடமிருந்து விடுத்து, புதிய கல்வித் துறை அதிகாரிகள் பதவியை ஏற்படுத்தி தரமான கல்வி அளிக்க வேண்டும்.

  புதிய கல்வி கொள்கையின்படி பிஇடி படித்த ஒருவர்தான் கல்வி நிலையங்களையும், ஆசிரியர்களையும் பார்வையிட வேண்டும் என்ற விதியை பின்பற்றி உடனடியாக மாவட்ட நல அலுவலர்களிடமிருந்து விடுவித்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு அப்பதவிகளை ஏற்படுத்த வேண்டும்.

  தொடர்ந்து 20 ஆண்டுகள் பதவி உயர்வு இல்லாமல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கக் கோருதல், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பணி மூப்புப் பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai