சுடச்சுட

    

    பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் நான்காம் சோமவாரம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற உள்ளது.

    திரிபுர சம்ஹாரம் நடந்த திருவதிகை வீராட்டானேஸ்வரர் கோயிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவாரம் (திங்கள்கிழமை) சிவன் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறுவது வழக்கம்.

    முதல் மூன்று சோமவார நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறின. திங்கள்கிழமை நான்காம் சோமவார நிகழ்ச்சி நடத்த கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.

    அதன்படி, பிற்பகல் 2.30 மணிக்கு வீரட்டானேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகமும், இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள், உற்சவ மூர்த்திகளுக்கு சோட உபசார சிறப்பு தீபாராதனையும், இரவு 8 மணிக்கு பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவுலா நடக்கவுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai