சுடச்சுட

  

  ஊராட்சிக்கு கூடுதல் நிதி: ஊரக வளர்ச்சித் துறை இயக்குநரிடம் மனு

  By பண்ருட்டி  |   Published on : 08th December 2014 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், குறிஞ்சிப்பாடி வட்டம், வடக்குத்து ஊராட்சி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வடக்குத்து ஊராட்சி மன்றத் தலைவர் கோ.ஜெகன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பாஸ்கரிடம் சனிக்கிழமை மனு அளித்தார்.

  அவர் அளித்த மனு விவரம்: குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உற்பட்டது வடக்குத்து ஊராட்சி.

  2001 மக்கள் தொகை கணக்கெடுப்புபடி மக்கள் தொகை 6,493 பேர். தற்போது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 25,635 பேர் வசித்து வருகின்றனர்.

  2011ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின் போது மக்கள் தொகையை கருத்தில் கொண்டு 9 வார்டுகளாக இருந்ததை 12 வார்டுகளாக உயர்த்தி மாவட்ட நிர்வாகம் தேர்தலை நடத்தியது.

  வடக்குத்து ஊராட்சியில் நகர் புற ஊரமைப்பு இயக்குநரால் அங்கீகாரம் வழங்கப்பட்ட 42 நகர் பகுதிகளும்,

  8 கிராமங்களும் உள்ளன.

  இப்பகுதியில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள், தொழிலாளர்கள், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

  2001 மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்கப்படும் சொற்ப நிதியை கொண்டு குடிநீர், சாலை, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர முடியாத சூழல் ஊராட்சிக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் மாநில நிதிக்குழு மானியம், மத்திய, மாநில அரசுகளின் திட்ட நிதிகளும் போதுமானதாக இல்லை.

  வடக்குத்து ஊராட்சி 2005-2006-ல் நிர்மல் புரஸ்கார் விருதை பெற்ற ஊராட்சியாகும்.

  எனவே, தற்போதைய மக்கள் தொகையை கணக்கில் கொண்டு வடக்குத்து ஊராட்சிக்கு கூடுதல் நிதி வசதி செய்து தரவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai