சுடச்சுட

    

    ஊராட்சிமன்றத் தலைவருக்கு மிரட்டல்: ஊழியர் கைது

    By கடலூர்,  |   Published on : 08th December 2014 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சம்பளம் வழங்காத ஊராட்சிமன்றத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சி ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

    விருத்தாசலம் வட்டம், கோ.பவழங்குடி ஊராட்சிமன்றத் தலைவர் கே.ஜோதி (64). அதே ஊராட்சியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவராக பணியாற்றி வருபவர் மு.சங்கர். இவருக்கு கடந்த நவம்பர் மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படவில்லையென தெரிகிறது.

    இதையடுத்து சங்கர், இதுகுறித்து ஊராட்சிமன்றத் தலைவரிடம் கேட்டதோடு, அவரிடம் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

    இதுகுறித்து ஜோதி அளித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து சங்கரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai