சுடச்சுட

  

  கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கு அதன் இயக்குநர் கே.முத்துக்கருப்பன் பாராட்டு தெரிவித்தார்.

  கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெய்வேலி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, பண்ருட்டி ஆகிய இடங்களில் ஊர்க்காவல்படை செயல்பட்டு வருகிறது. ஊர்க்காவல்படையினர் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துதல், திருவிழாக்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் தனியாக மகளிர் பிரிவும் செயல்பட்டு வருகிறது.

  மாவட்டத்தில் 495 ஊர்க்காவல் படையினர் செயல்பட்டு வருகிறார்கள். இதில், 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊர்க்காவல் படையினருக்கான பாராட்டு விழா கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஊர்க்காவல் படை இயக்குநர் கே.முத்துக்கருப்பன் பங்கேற்று 12 பேருக்கு சிறப்புப் பரிசு வழங்கிப் பேசுகையில், ஊர்க்காவல் படையினரின் பணி மிகவும் சிறப்பானது. மக்களுக்கான இப்பணியை தவறாக பயன்படுத்தாமல் சேவையாக பயன்படுத்த வேண்டும். அந்த வகையில், கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படை சிறப்பாக செயல்படுகிறது என்றார்.

  நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.ராதிகா, வடக்கு மண்டல தளபதி ராஜேந்திரன், விழுப்புரம் வட்டார தளபதி ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்றனர்.

  கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி கேதார்நாதன் வரவேற்றார். துணை வட்டார தளபதி ஜெயந்தி ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai