சுடச்சுட

  

  "ஊழியர் வருகைப் பதிவேட்டில் திருத்தம் செய்ய வேண்டும்

  By 'கடலூர்  |   Published on : 08th December 2014 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் கடலூர் மாவட்டத்திலிருந்து பங்கேற்ற 626 தொழிலாளர்களுக்கு அவர்களின் வருகைப் பதிவேட்டில் பணிக்கு வரவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதை நிர்வாகம் ரத்து செய்து ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

  கடலூர் மாவட்ட அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்புக் கூட்டம் சிஐடியு அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஐஎன்டியுசி பேரவைச் செயலர் எம்.கொளஞ்சி தலைமை வகித்தார். கூட்டத்தில், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) காலை 10 மணிக்கு கடலூர் மண்டல தலைமையகத்தில் நடைபெறும் பெருந்திரள் முறையீட்டு கூட்டத்தில் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  கூட்டத்தில், தொமுச தலைவர் பி.பழனிவேல், சிஐடியு தலைவர் ஜி.பாஸ்கரன், பா.தொ.ச. தலைவர் டி.ஜெயசங்கர், ம.தொ.ச. பொதுச்செயலர் இரா.மணிமாறன் உள்ளிடோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai