சுடச்சுட

  

  பண்ருட்டியை அடுத்த தட்டாம்பாளையம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை, தைபூச சக்தி மாலை இருமுடி அணிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  கடலூர் மாவட்ட இணைச் செயலர் (தணிக்கை) பி.கணபதி தலைமையில், பண்ருட்டி வட்டத் தலைவர் அ.ஏழுமலை சக்தி கொடி ஏற்றினார்.

  மாவட்ட இணைச் செயலர் (வேள்வி) வி.செல்வராஜ் தலைமையில், மாவட்டத் தலைவர் கே.கிருபானந்தம் கலச விளக்கு வேள்வியை தொடங்கி வைத்தார். மாவட்ட பொருளர் சி.ஜெயபாலன் தலைமையில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.

  மாவட்ட இணைச் செயலர் வி.கலையரசி, துணைத் தலைவர் ஜி.முருகுவெங்கட்ராமன் தலைமையில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai