சுடச்சுட

    

    கேரம் போட்டியில் பங்கேற்க வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கோ.நந்தகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கடலூர் மாவட்ட கேரம் விளையாட்டுச் சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கேரம் போட்டி டிசம்பர் 9-ம் தேதி, காலை 9 மணிக்கு கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

    5-ம் வகுப்பு வரையிலானவர்கள் பங்கேற்கும் இளநிலைப் பிரிவு, 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலானவர்கள் பங்கேற்கும் முதுநிலைப் பிரிவுகளில் ஒற்றையர், இரட்டையர் ஆட்டங்கள் நடைபெறும்.

    ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒரு பிரிவுக்கு ஒரு அணி மட்டுமே அனுமதிக்கப்படும். போட்டியில் பங்கேற்பதற்கான நுழைவு விண்ணப்பத்தை ஒவ்வொரு பிரிவுக்கும் தனித் தனியாக போட்டி நாளன்று காலை 8 மணிக்கு வழங்க

    வேண்டும்.

    இளநிலை பிரிவில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக தலா ரூ.500-ம், 2-வது, 3-வது பரிசாக முறையே ரூ.250, 125-ம், முதுநிலைப் பிரிவு போட்டியில் முறையே ரூ.ஆயிரம், ரூ.500, ரூ.250 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

    மேலும், வெற்றி பெறுவோர் மாநில அளவிலான போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai