சுடச்சுட

  

  சபரிமலை பக்தர்களுக்கு மருந்து, மாத்திரைகள்

  By சிதம்பரம்,  |   Published on : 08th December 2014 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரத்தில் இருந்து ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலை பக்தர்களுக்கு முதலுதவிக்காக முதல் தவணையாக ரூ.65 ஆயிரம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

  சிதம்பரம், அண்ணாமலைநகர் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் பொன்மணி அரங்கில் ஐயப்பன் திருவிளக்கு பூஜை மற்றும் சபரிமலை பக்தர்களுக்கு மருந்து, மாத்திரைகள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் 108 மகளிர்கள் பங்கேற்றனர்.

  நிகழ்ச்சியில் சபரிமலை பக்தர்களுக்கு வழங்க முதல் தவணையாக ரூ.65 ஆயிரம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகளை கடலூர் மாவட்ட ஐயப்ப சேவா சங்கச் செயலாளர் பி.சுவாமிநாதனிடம், நிர்வாகிகள் வி.சங்கர், கே.கணேசன், சிவக்குமார், சங்ககிரி, பாஸ்கர் ஆகியோர் வழங்கினர்.

  நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் யாகமூர்த்தி முன்னிலை வகித்தார். பின்னர் சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai