சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துளிர் திறனறிதல் தேர்வை 478 பேர் எழுதினர்.

  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் திறனறிதல் தேர்வு கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. இளநிலை தேர்வை 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான 316 பேரும், முதுநிலைத் தேர்வை 12-ம் வகுப்பு வரையிலான 162 பேரும் எழுதினர்.

  இத்தேர்வில் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியருக்கு மாநில அளவில் 2 நாள்கள் பயிற்சியும், பரிசுகளும் வழங்கப்படும். மேலும், விஞ்ஞானிகளுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படும்.

  கடலூரில் நடைபெற்ற தேர்வை தமிழ்நாடு அறிவியல் இயக்க கடலூர் மாவட்டத் தலைவர் எஸ். விக்டர்ஜெயசீலன், துணைச்செயலர் உதயேந்திரன், நெய்வேலியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட செயலர் ஆர்.தாமோதரன், நெய்வேலி நகர செயலர் எஸ்.பாலாஜி, தலைவர் ஆர்.ராஜகோபால் ஆகியோர் நடத்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai