சுடச்சுட

  

  தூய்மை இந்தியா திட்டம்: ஆட்சியரின் முகாம் அலுவலகத்தை சுத்தம் செய்த கைதிகள்

  By கடலூர்,  |   Published on : 08th December 2014 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தை மத்திய சிறைக் கைதிகள் ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்தனர்.

  பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டம் நாடுமுழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பல்வேறு அமைப்பினர் பங்கேற்று பொது இடங்களை சுத்தம் செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் கடலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகள் மூலம் பொது இடங்களை தூய்மைப்படுத்தும் பணியை சிறை கண்காணிப்பாளர் ஆ. முருகேசன் மேற்கொண்டுள்ளார்.

  முதல் இடமாக மாவட்ட ஆட்சியரின் முகாம் வளாகம் தேர்வு செய்யப்பட்டது. ஆயுள் தண்டனை பெற்ற நன்னடத்தை கைதிகள் 51 பேர் மூலமாக முகாம் அலுவலக வளாகத்தை சுத்தப்படுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.

  வளாகத்தில் தேங்கிக் கிடந்த குப்பைகள், மரங்களின் தழைகளை கைதிகள் அப்புறப்படுத்தினர்.

  இதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளர் ஆ. முருகேசன் கூறுகையில், கடலூர் மத்திய சிறையில் 400 தண்டனைக் கைதிகள் உள்பட 700 பேர் உள்ளனர். இவர்களில் நன்னடத்தை கைதிகள் 51 பேரை தேர்வு செய்து மாவட்ட ஆட்சியரின் அலுவலக வளாகத்தை தேர்வு செய்து சுத்தப்படுத்தியுள்ளோம்.

  அடுத்ததாக நீதிமன்ற வளாகம், அண்ணா விளையாட்டு மைதானம், வெள்ளி கடற்கரை உள்பட மக்கள் பயன்பாட்டில் உள்ள இடங்களை சுத்தம் செய்ய உள்ளோம்.

  இப்பணியை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த

  உள்ளோம் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai