Enable Javscript for better performance
தொழிலாளி வெட்டிக்கொலை- Dinamani

சுடச்சுட

    

    தொழிலாளி வெட்டிக்கொலை

    By கடலூர்  |   Published on : 08th December 2014 04:09 AM  |   அ+அ அ-   |    |  

    கடலூரில் தனியார் நிறுவனத் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் சின்ன பிள்ளையார்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சின்ராஜ் என்ற தன்னரசன் (29). கடலூர் அருகேயுள்ள காரைக்காடு பகுதியில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். சனிக்கிழமை இரவு வேலையை முடித்து விட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் இவரை வழிமறித்து அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

    இதில், பலத்த காயமடைந்த சின்ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து, கடலூர் முதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் குருமூர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார். சின்ராஜ் அண்ணன் உதயசூரியன் கடந்த 2011-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai