சுடச்சுட

  

  படைவீரர்கள் கொடிநாள் வசூலை கடலூரில் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.

  இந்தியாவின் முப்படைகளிலும் பணிபுரியும் வீரர்களின் தியாகத்தையும், வீரச்செயலையும் போற்றிடும் வகையில், படைவீரர் கொடிநாள் ஒவ்வொரு ஆண்டும்

  டிசம்பர் 7-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு படைவீரர் கொடிநாள் விழா உண்டியல் வசூலை ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தொடங்கிவைத்தார்.

  தொடர்ந்து கடலூர் நகர அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கு ரூ.1,67,676 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

  மேலும், கடந்தாண்டு அரசு நிர்ணயித்த வசூல் இலக்கான ரூ.24,67,300. ஆனால், ரூ.58,51,100 வசூலிக்கப்பட்டதாக ஆட்சியர் கூறினார்.

  இந்நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மேஜர் எஸ்.ரூபாசுப்புலட்சுமி, தேசிய மாணவர்படை அலுவலர்கள் ஆரோக்கியசாமி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  சிதம்பரம்

  சிதம்பரத்தில் படைவீரர் குடும்ப நலனுக்காக ஊர்க்காவல் படையினர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கொடிநாள் உண்டியல் வசூலை சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் உதவிஆட்சியர் எம்.அரவிந்த் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

  நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு ரூ.33,315 தொகை கொடி நாளுக்காக வசூலித்துத் தந்த சிதம்பரம் கோட்டத்தில் முதலிடம் பெற்ற நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு சுழற்கோப்பையை அப்பள்ளி தலைமை ஆசிரியையிடம் உதவிஆட்சியர் வழங்கினார்.

  இந்நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை வட்டாரத் தளபதி ஆர்.கேதார்நாதன், படைத்தளபதி என்.வீரமணி, உதவி படைத் தளபதி டி.வேதரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  மேலும், நிகழ்ச்சியில் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் கொடிநாள் வசூல் செய்ய உண்டியல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 53 பேர் உண்டியல் வசூலில் ஈடுபட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai