சுடச்சுட

  

  அடிப்படை வசதிகள்: சலவைத் தொழிலாளர்கள் கோரிக்கை

  By கடலூர்,  |   Published on : 09th December 2014 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சலவைத் தொழிலாளர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டுமென தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

  கடலூர் திருப்பாதிரிபுலியூர் சலவைத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் எஸ். சுரேஷ்குமாரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். அதில், திருப்பாதிரிபுலியூர் பகுதியில் சுமார் 150 சலவைத் தொழிலாளர் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொழில் செய்து வருகிறோம்.

  ஆனால், இப்பகுதியில் தண்ணீர், கழிவறை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதியில்லை. சுற்றுச் சுவர்கள் இல்லாமலும் உள்ளது. எனவே, இப்பகுதியில் தேவையான வசதிகள் செய்து தொழில் நடத்துவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

  இதேபோன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அளித்துள்ள மனுவில், சலவை செய்யும் இடத்தில் சமூக விரோதிகள் மது அருந்துவது, பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே, சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai