Enable Javscript for better performance
அனுமதியின்றி மணல் எடுப்பு: 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி மணல் எடுப்பு: 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

    By பண்ருட்டி,  |   Published on : 09th December 2014 03:35 AM  |   அ+அ அ-   |    |  

    அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற நான்கு மாட்டு வண்டிகளை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

    அனுமதி இல்லாமல் மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிச் செல்லப்படுவதாக காடாம்புலியூர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வாளர் முருகேசன் மேல்மாம்பட்டு நடுநிலைப் பள்ளி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகளை சோதனையிட்டபோது, அவை உரிய அனுமதி பெறாமல் மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த நான்கு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த ஆய்வாளர் முருகேசன், மேலும் அதன் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai