சுடச்சுட

    

    மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக இடதுசாரி கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை நடைபெற்றது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலர் என்.கே. பாஸ்கர், மார்க்சிஸ்ட் நகரச் செயலர் ஆர். உத்தராபதி ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர்கள் கே. தனபால், அண்ணா கிராமம் ஆர். லோகநாதன், சிபிஐ வட்ட துணைச் செயலர் எஸ்.டி. குணசேகர், பொருளர் எம்.குணசேகர், சிஐடியூ மாவட்டக் குழு வி.மோகன், சிபிஎம் நெல்லிக்குப்பம் செயலர் எம்.ஜெயபாண்டியன், சிபிஐ வட்டக்குழு எம். ஆறுமுகம், ஜி.ரமேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    சிபிஐ மாநில நிர்வாகக்குழு டி. மணிவாசகம், சிபிஎம் மாவட்டச் செயலர் டி. ஆறுமுகம், சிபிஐ வட்டச் செயலர் பி.துரை, சிபிஎம் மாவட்ட குழு வி. சேதுராஜன், சிபிஐ மாவட்டக்குழு கே. சரவணன், சிபிஐ வட்டக்குழு கே. முத்துக்குமரன் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முடக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய

    அரசின் கொள்கைகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம்

    நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai