சுடச்சுட

  

  "இயற்கை மருத்துவம் ஆரோக்கியத்தை கொடுக்கிறது

  By 'சிதம்பரம்  |   Published on : 09th December 2014 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இயற்கை மருத்துவம் நமது உடலில் உள்ள உயிராற்றலை பெருக்கி ஆரோக்கியத்தை கொடுக்கிறது என திருச்சியைச் சேர்ந்த டாக்டர் எஸ்.தியாகராஜன் தெரிவித்தார்.

  சிதம்பரம் அருகே புவனகிரி ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் மகரிஷி ஆன்மிகத் தொண்டு அறக்கட்டளை சார்பில் இயற்கை மருத்துவ விளக்க முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அறக்கட்டளைத் தலைவர் டி. ஸ்ரீதர் தலைமை வகித்தார். இணைச் செயலாளர்கள் ஆர். சரவணன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ஜே.சண்முகம் வரவேற்றார்.

  சிரிப்பு யோகா பயிற்சியை டாக்டர் பி.முகேஷ்குமார் அளித்து பேசினார். அவர் கூறியது:

  சிரிப்பு யோகா மனஅழுத்தத்தைப் போக்கும் பக்க விளைவு இல்லாத மருந்தாகும்.

  தொற்றா நோய்களான சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், இதய நோய் உள்ளிட்ட நோய்களை சிரிப்பு யோகா கட்டுப்படுத்துகிறது. எனவே தினமும் 10 நிமிடங்களாவது வயிறு குலுங்க சிரித்து மகிழ வேண்டும் என்றார்.

  அனைத்து நோய்களும் நீங்க இயங்கை மருத்துவம் என்ற தலைப்பில் திருச்சியைச் சேர்ந்த டாக்டர் எஸ்.தியாகராஜன் பேசினார். அவர் கூறியது: மிளகு எப்படிப்பட்ட நஞ்சையும் முறிக்கும் தன்மை கொண்டது.

  வெந்தயம் இரும்பு சத்து நிறைந்த மாமருந்து. சீரகம் நம் உடல் உறுப்புகளை சுத்தப்படுத்தக்கூடியது. நமது வீட்டு சமையலறையில் உள்ள அஞ்சரை பெட்டியில் உள்ளவைகளை கொண்டே பல நோய்களை விரட்ட முடியும். இயற்கை மருத்துவம் நமது உடலில் உள்ள உயிராற்றலை பெருக்கி ஆரோக்கியத்தை கொடுக்கிறது என்றார்.

  முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைவருக்கும் இலவசமாக நாடி பரிசோதனை, ரத்தஅழுத்தம், கண் பரிசோதனை, சர்க்கரை நோய் கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டு இயற்கை உணவு வழங்கப்பட்டது. பாரம்பரிய இயற்கை பல்பொருள் கண்காட்சி, புத்தக கண்காட்சி நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஞான.இறைநேசன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai