சுடச்சுட

  

  கம்யூனிஸ்ட் அமைப்புகள் பிரசாரக் கூட்டம்

  By விருத்தாசலம்  |   Published on : 09th December 2014 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   விருத்தாசலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் சார்பில், பிரசாரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

  மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை முடக்கியதைக் கண்டித்தும், கடலூர் மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் மட்டும் என்பதை திரும்பப்பெற்று அனைத்து ஒன்றியங்களிலும் 100 நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

  உயிர்காக்கும் மருந்துகள் உள்பட அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்துத்துவா கொள்கைகளை அனைத்துத் துறைகளில் திணிப்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்), சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், விருத்தாசலம் பாலக்கரை திலீபன் சதுக்கத்தில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

  கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலர் அசோகன் தலைமை ஏற்றார். சி.பி.ஐ. வட்டச் செயலர் கலியபெருமாள், சி.பி.ஐ. (எம்.எல்) பகுதி பொறுப்பாளர் தனவேல், சோசலிஸ்ட் யூனிட்டி அமைப்பின் மாவட்டச் செயலர் சந்திரா, ஜீவானந்தம், வழக்குரைஞர் அம்பேத்கர், கந்தசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai