சுடச்சுட

  

  காவிரி ஆற்றின் குறுக்கே இரு தடுப்பணைகள் கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், மத்திய அரசு தலையிட்டு அதனை உடன் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

  கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் மு. முடிவண்ணன் தலைமை வகித்தார். மூத்த நகர்மன்ற உறுப்பினரும், மாநில நிர்வாகக்குழு உறுப்பினருமான ஆ. ரமேஷ் வரவேற்றார். ஒன்றியச் செயலாளர்கள் கே.ஆர்.ஜி. தமிழ், வாசு, சரவணன், எ.கரிகாலன், ப.ஆண்டவர் செல்வம், என்.எஸ்.டி.தில்லை, ச.கோபு, கி.பரசுராமன், கோ.முருகன், கு.ப.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செய்தி தொடர்பாளர் த.குபேந்திர குணபாலன் சிறப்புரையாற்றினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் உ.கண்ணன், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ரா.பஞ்சமூர்த்தி, கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வ.சின்னதுரை, மாநில மாணவரணி தலைவர் ரவி.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். சிதம்பரம் நகரத் தலைவர் சா. சுகுமார் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai