சுடச்சுட

  

  பேராசிரியரின் இடமாற்றத்தைக் கண்டித்து கல்லூரி மாணவிகள் திங்கள்கிழமை

  உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  கடலூரில் செயல்படும் தனியார் மகளிர் கலைக்கல்லூரி கணிதத் துறை பேராசிரியையாக பி. சாந்தி பணியாற்றினார். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள கல்லூரிக்கு மாற்றப்பட்டாராம். இதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் முறையிட்டதன் பேரில் தற்போதுள்ள நிலையே 2 வாரங்களுக்குத் தொடர நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் டிசம்பர் 3-ம் தேதி கல்லூரிக்குச் சென்றபோது போலீஸார் தடுத்து நிறுத்தினராம்.

  இந்நிலையில், பேராசிரியையின் இடமாற்றத்தைக் கண்டித்தும், அவரை மீண்டும் கடலூர் கல்லூரிக்கு மாற்றக் கோரியும் கல்லூரியின் அனைத்துத் துறை மாணவிகளும் திங்கள்கிழமை இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்புகளை புறக்கணித்த மாணவிகள் கல்லூரி வளாகத்துக்குள் அமர்ந்து கோஷமிட்டனர்.

  இதையடுத்து, கடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் மு.ராமமூர்த்தி தலைமையில் போலீஸார் கல்லூரிக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் மாணவிகள் போராட்டத்தைக் கைவிடவில்லை.

  இதுகுறித்து மாணவிகள் தரப்பில் கூறியதாவது: கணிதப் பேராசிரியை பி.சாந்தி இடமாற்றத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அவர், சிண்டிகேட் கூட்டங்களில் மாணவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். அதற்காகத்தான் அவர் மாற்றப்பட்டுள்ளார் என்று கருதுகிறோம். அவரை கடலூர் கல்லூரியில் நியமிக்கும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai