சுடச்சுட

  

  குப்பை வளாகம் அமைக்க நாம் தமிழர் கட்சி கோரிக்கை

  By கடலூர்,  |   Published on : 09th December 2014 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நெல்லிக்குப்பம் நகராட்சியில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் குப்பை வளாகம் அமைக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது.

  கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வா.கடல்தீபன் மற்றும் நிர்வாகிகள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அதில், கூறப்பட்டிருப்பது: நெல்லிக்குப்பம் நகராட்சி திருக்குளம், பனந்தோப்பு, ஆரோக்கியசாமி தெரு, ரகுமான் நகர் பகுதியில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அப்பகுதியில் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை, கோழி இறகுகள், மருத்துவக் கழிவுகள் இங்கு கொட்டப்படுகின்றன.

  இதனால், ஏராளமான பன்றிகள் இப்பகுதியில் சுற்றித் திரிவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு ஆஸ்துமா, டெங்கு, மலேரியா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இது குறித்து நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைத்தபோது 3.14 ஏக்கர் நிலம் குப்பைக் கொட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த இடத்தை குப்பை வளாகமாக மாற்றுவதாகவும் கூறினார்.

  ஆனாலும், அதன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இப்பிரச்னையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதியின் சுகாதாரம் காக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai