சுடச்சுட

  

  சபரிமலையை தேசிய புனிதத் தலமாக அறிவிக்க வலியுறுத்தல்

  By சிதம்பரம்  |   Published on : 09th December 2014 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சபரிமலையை தேசிய புனிதத் தலமாக அறிவிக்க வேண்டும் என சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் வலியுறுத்தியுள்ளது.

  இதுகுறித்து அந்த சமாஜத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஈரோடு என்.ராஜன் செய்தியாளர்களிடம் கூறியது:

  கடந்த 2010-ம் ஆண்டு சபரிமலை புல்மேட்டு பாதையில் நெரிசலில் சிக்கி 104 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சமாஜத்தின் போராட்டத்துக்குப் பிறகு 104 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

  சிதம்பரத்தில் ஐயப்பன் படத்துடன் ஐயப்ப குருமார்கள் ஊர்வலம் செல்ல டிஎஸ்பி தடை விதித்ததை வன்மையாக கண்டிக்கிறோம். பிரதமர் நரேந்திரமோடி ஜனவரி 20-ம் தேதிக்குள் சபரிமலைக்கு வருவதாக ஒப்புதல் அளித்துள்ளார். சபரிமலையை மத்திய அரசு தேசிய புனிதத் தலமாக அறிவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

  சேவா சமாஜம் மாநில துணைத் தலைவர் கே.நடராஜபிரபு, மாநில அமைப்புச் செயலாளர் ஆர்.சிவராமன், மத்திய நிர்வாகச் செயலாளர் எம்.எஸ்.எஸ்.மணியன், சி.டி.அப்பாவு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai